School History
Home | School History
History of St. Joseph Hr.Sec School
E

St. Vallon Congregation of the Lions of France The school was founded by archangels. AD 1906-E Annual Congregation Eucharistic Footprints Importance of female education when taken They realized that they were not given. They do this The disadvantage of women in the room With the aim of creating a vibrant, uplifting society The first school for women was started in Madurai. Overcrowding over various oppositions Visit parents and meet their girl friends They were encouraged to send to school. In this insightful work Sister. Service by Rose Benedicta Noteworthy. These are the M educational institutions Who started and spread.

School 1932 as a high school and AD 1980 - Upper School Upgraded. They will continue to attack An unparalleled energy education, home and country Empalli is educating women to create the ideal, ideal girls Sports, Science, Spirituality, Appraisal, Art etc. In the fields and training for social change Let the students excel with diversity Continuing to provide assessment-based education.

The Light of Truth Through the Life of Jesus Motivated M congregation founders are John Peter Metai ft., By John John Fontbone Sacred Lions of Sacred Heart in the Footsteps We, as nuns, are all Empirically expressing the values of the sovereign Resistance to the evils that disrupt society today Education is a powerful tool for creating power Doing. So we,

  • The poor and the humble are the special love of the Lord People with a mindset of personal attention Drive.
  • All levels of integrated education Giving and accepting the values of Jesus Christ, His The younger generation as whole people with the same mindset We are trying to create.
  • Platform for Linking Faith and Justice Faith in the Lord through activities Revealing all the circumstances of today's life Our heroes who live in love and justice We make students.
  • The life of the witness who embraces the values of the gospel Evil forces that destroy a good society Rooting out the values of the Gospel, and its aftermath "Gospel" to all our educational institutions We are mentally committed to announce.
  • In a multicultural and multicultural society With God, Nature, and the Human Beings The goodwill we have, the unity in society Creative harmony to thrive in harmony We strive to develop among students. Thus by acting on the embalms new Let the sky come true.

பிரான்சு நாட்டைச் சேர்ந்த லயன்சின் புனித வளன் சபை அருட்சகோதரிகளால் இப்பள்ளி நிறுவப்பட்டது. கி.பி. 1906-ம் ஆண்டு இச்சபை அருட்சகோதரிகள் நம் பாரத மண்ணில் காலடி எடுத்துவைத்த பொழுது பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை உணர்ந்தார்கள். அவர்கள் இதை ஓர் அறை கூவலாக ஏற்றுக்கொண்டு பெண்களின் பின்தங்கிய நிலையை உயர்த்த, சீர்மிகு சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன் பெண்களுக்கே உரிய முதற்பள்ளியை மதுரையில் தொடங்கினர். பல்வேறு எதிர்ப்புகளையும் கடந்து அருட்சகோதரிகள் இல்லங்கள் தோறும் சென்று பெற்றோரை சந்தித்து அவர்களின் பெண் மக்களை பள்ளிக்கு அனுப்பும்படி ஊக்குவித்தார்கள். இவ்வார்வமிக்க பணியில் அருட்சகோதரி. ரோஸ் பெனடிக்டா அவர்களின் சேவை குறிப்பிடத்தக்கது. இவரே எம் கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கும் வித்திட்டவர்.

இப்பள்ளி கி.பி. 1932- ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், கி.பி. 1980 - ம் ஆண்டு மேல் நிலைப் பள்ளியாகவும் உயர்த்தப்பட்டது. அவ்அருட்சகோதரிகளைத் தொடர்ந்து அணுவும் பிறழாது ஆற்றல் மிகு கல்விச் சாலையாக, வீட்டிற்கும், நாட்டிற்கும் ஏற்ற, சிறந்த பெண்மணிகளை உருவாக்கிட எம்பள்ளியானது கல்வி, விளையாட்டு, அறிவியல், ஆன்மீகம், மதிப்பீடு, கலை எனப் பல துறைகளிலும், சமூக மாற்றத்திற்கு ஏற்பப் பயிற்சியளித்து பன்முகத்திறமையுடன் மாணவிகள் சிறந்து விளங்கிட இறை மதிப்பீடு சார்ந்த கல்வியைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

உண்மையின் ஒளியாம் இயேசுவின் பணி வாழ்வால் உந்தப்பட்ட எம் சபை நிறுவனர்கள் அருட்தந்தை ஜான் பீட்டர் மெடாய் அடிகள், அன்னை ஜான் ஃபோன்ட்போன் இவர்களின் அடிச்சுவடுகளில் அர்ப்பணித்துச் செயல்படும் லயன்சின் புனித வளன்சபைக் கன்னியர்களாகிய நாங்கள், அனைவருக்கும் இறையரசின் மதிப்பீடுகளை அனுபவப்பூர்வமாக வெளிப்படுத்தி இன்றைய சமுதாயத்தை சீர்குலைக்கும் தீமைகளுக்கு எதிர்ப்புச் சக்தியாக உருவாக்கும் வலிமையான கருவியாகக் கல்விப்பணியினை மேற்கொள்கிறோம். எனவே நாங்கள்,

  • ஏழை, எளியவர்கள் இறைவனின் சிறப்பான அன்பிற்குரிய மக்கள் என்ற மனநிலையோடு அவர்களிடம் தனிப்பட்ட கவனம் செலுத்துகின்றோம்.
  • ஒருங்கிணைந்த கல்வியை அனைத்து நிலைகளிலும் அளித்து இயேசு கிறிஸ்துவின் மதிப்பீடுகளை ஏற்று, அவருடைய மனநிலையை ஒத்து முழுமனிதர்களாக இளைய தலைமுறையினரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறோம்.
  • விசுவாசத்தையும் நீதியையும் இணைக்கும் பணித்தளச் செயல்பாடுகளின் வழியாக இறைவன் மீதுள்ள விசுவாசத்தை இன்றைய வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் வெளிப்படுத்தி அன்பிலும், நீதியிலும் நிலைத்து வாழும் வீராங்கனைகளாக எமது மாணவியரை உருவாக்குகிறோம்.
  • நற்செய்தியின் மதிப்பீடுகளைத் தழுவிய சாட்சிய வாழ்வின் வழியாக நல்லதொரு சமுதாயத்தை அழிக்கும் தீய சக்திகளை வேரறுத்து நற்செய்தியின் மதிப்பீடுகளை மலரச்செய்து, அதன்வழி எமது கல்வி நிலையங்களை அனைவருக்கும் "நற்செய்தியாக" அறிவிக்க மன உறுதி கொள்கிறோம்.
  • பலசமய, பன்முகக் கலாச்சாரம் கொண்ட நம் சமுதாயத்தில் இறைவனுடனும், இயற்கையுடனும், மனித இனங்களுடனும் நாங்கள் கொள்ளும் நல்லுறவால், சமுதாயத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் தழைத்தோங்க ஆக்கப்பூர்வமான நல்லுணர்வுகளை மாணவியரிடையே வளர்க்க முயல்கிறோம். இவ்வாறு எம்பள்ளிகள் செயல்படுவதன் மூலம் புதிய வானகம் புதிய வையகம் படைக்கும் கனவை நனவாக்குவோம்.
How To Reach Us
Old Kuyavarpalayam Road, Madurai-9, Tamilnadu, India.
0452 4381943
sjghssmdu@gmail.com
Copyrights @ 2020 All Rights Reserved
Maintained By Avail Technologies